திருக்குறள் :
பால் : பொருட்பால்.
இயல் :நட்பியல்.
அதிகாரம் : மருந்து.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
பொருள் :
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
பழமொழி :
Nothing is impossible to a willing heart
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன்.
2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்
பொன்மொழி :
என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன்! காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல! 1000 தோல்விகளை பார்த்தவன் - தாமஸ் ஆல்வா எடிசன்
பொது அறிவு :
1. உலகில் எத்தனை வகை அணில்கள் உள்ளன?
280 அணில்கள்.
2. ஒரு அணிலின் சராசரி ஆயுள் காலம் எவ்வளவு?
3 - 5 வருடங்கள்
English words & meanings :
Fagged - extremely tired. Adjective word. மிகவும் களைப்பு, மயக்கம். பெயரடை சொல்
ஆரோக்ய வாழ்வு :
வாழைப்பூவை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். பச்சைத் தன்மை குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்
NMMS Q - 6
தமிழ்நாட்டில் பறத்தல் விளையாட்டிற்கு ஏற்ற மலைச் சரிவுகளை கொண்டுள்ள மாவட்டம் எது?
விடை : வேலூர்
ஜூன் 20
கவிஞர் சுரதா அவர்களின் நினைவுநாள்
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
நீதிக்கதை
பூவா தலையா
ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்.
இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,
அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம் என்று துறவி சொன்னதைச் சொன்னார்.
வீரர்களிடம் நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.
அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.
யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி விதியை யாராலும் மாற்ற முடியாது என்று ராஜாவிடம் சொல்ல ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.
இன்றைய செய்திகள் - 20.06.2022
★சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
★தமிழகம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு 5 மாவட்டங்களில் நடைபெற்றது.
★ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரை புதுமண்டபத்தில் நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுப்பு.
★வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
★அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
★ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை: மத்திய அரசு தீவிரம்.
★அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
★இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.
★ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்திய வீராங்கனை பிரனதி நாயக் வெண்கலப்பதக்கம் வென்றார்.
★உலக அளவில் நேபாளத்தில் நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்க மதுரை மாணவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
★2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.
★ரஞ்சி கோப்பை : மும்பை-மத்தியபிரதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
*Tamilnadu Chief Minister has written a letter to Kerala Chief Minister Binarayi Vijayan asking him to upgrade and maintain the water storage of the Siruvani Dam to its full capacity.
* Chennai: The selection for the post of "Child Welfare Officer" was held in 5 districts across Tamil Nadu.
* An inscription was discovered which states the existence of a library in the Madurai Puthu Mandabam during the British rule.
* Weather forecast: Chance of heavy rain in 17 districts of Tamil Nadu.
* The Ministry of Defense has made it clear that the fire project will not be withdrawn.
* Prohibition of single-use plastic products: Federal Government is pressing on .
* In the United States, the government has approved the corona vaccination for 6-month-old baby
* Schools in Sri Lanka are closed for two weeks due to fuel shortages. The number of employees in government offices is being reduced
* Asian Gymnastics: Indian Pranati Nayak won bronze
* A Madurai student has been selected to compete in the 100m running race in World level Championships in Nepal.
* Venues for the 2026 World Cup football match has been announced
* Ranji Trophy: Mumbai-Madhya Pradesh teams advanced to the final
Prepared by
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக