இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

வியாழன், 14 ஜூலை, 2022

 



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என அவர் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நலம்பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.



இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent