பள்ளி அலுவலகங்களில் மீதமுள்ள விலையில்லா மடிக்கணினிகளை ஆசிரியா்களின் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிக் கல்வி ஆணையரகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
இதில், மாணவா்களுக்கு வழங்கியது போக மீதம் உள்ள 55 ஆயிரத்து 819 விலையில்லா மடிக்கணினிகளை பள்ளிகளின் கணினி ஆய்வு கூடத்துக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆசிரியா்களுக்கு நடத்தப்படும் பயிற்சிக்கு, இந்த மடிக்கணினிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக