தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2340 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,15,461-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 607 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 306, திருவள்ளூர் 149, கோவை 166, பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த பலி எண்ணிக்கை 38,029 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,60,204-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,228 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக