உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் மற்றும் லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் (சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்) இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகிறது.
இதுபற்றி சென்னையிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இந்தியக் கிளை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
'அறியப்படாத செய்திகள்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள், தங்கள் ஊரில், நகரில் பிடித்த, ரசித்த, நடந்த நிகழ்வுகள், செய்திகள், உலகறியா ஆளுமைகள் குறித்துக் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம்.
இதற்கென நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. போட்டிகளுக்கான கட்டுரைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும், 1000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தாங்கள் எழுதிய கட்டுரைகளை studentstamilconf2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கல்லூரி, பல்கலைக்கழக, பல்தொழில்நுட்ப கல்லூரி, ஆய்வு நிறுவன மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
கட்டுரைப் போட்டிக்கான முடிவுகள் 31.03.2023 அன்று மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனவும் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 1 லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக