இந்த வலைப்பதிவில் தேடு

தற்காலிக ஆசிரியர் நியமனம் எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

செவ்வாய், 19 ஜூலை, 2022

 




தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு எதிரான வழக்கின் விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பர்வதம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை  தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


பள்ளியின் அருகாமை பகுதியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது. குறிப்பாக இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. எனவே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அறிவிப்பின் அடிப்படையிலான மேல் நடவடிக்கைகளை தொடர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.


 இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘‘தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை கிளையில் தடை உள்ளது. ஆனால், சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது. இருவேறு உத்தரவுகள் இருக்கும் போது எதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, இதற்கு தீர்வு காண்பது அவசியம். அரசுக்கு நிதி தான் பிரச்னை என்றால், முதலில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்து, பின்னர் நிரந்தரமாக நியமிக்கலாமே’’ என கேள்வி எழுப்பினார். பின்னர், ‘‘இந்த பிரச்னையில் இரு  வேறுபட்ட நிலை இருப்பதால், எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணை ஜூலை 19க்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent