பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை நோக்கி பயணிக்கும் போது ஆண் பயணி, முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல் புகைப்படம் எடுத்தல் போன்றவை செய்தால் நடத்துநர்கள் எச்சரிக்கை விடுத்து இறக்கிவிடலாம்.
நடத்துநர்களின் எச்சரிக்கையை மீறி செயல்படும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக