இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக அரசு ஓய்வூதியம் தடைப்படாமல் இருக்க 30ம் தேதிக்குள் நேர்காணலை முடிக்க வேண்டும்

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

 



திருவள்ளுர் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் வழியாக ஓய்வூதியம் பெற்று வரும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஜுலை மாதம் முதல் தேதியிலிருந்து நேர்காணல் செய்து வருகின்றனர். 


ஓய்வூதியர்கள் ஜீவன் பிரமான் இணையதள மின்னணு மூலமாக அல்லது இந்திய அஞ்சல் துறையின் மூலமாகவோ அல்லது கருவூலங்களுக்கு நேரில் சென்றோ வாழ்நாள் சான்றிதழ் மூலமோ நேர்காணல் செய்து வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டக் கருவூல அலகில் உள்ள மொத்த ஓய்வூதியதாரர்கள் 25082 பேரில் 18106 ஓய்வூதியதாரர்கள் மட்டுமே இதுவரை நேர்காணலை முடித்துள்ளனர். மீதமுள்ள 6976 ஓய்வூதியதாரர்கள் நேர்காணல் செய்யாமல் உள்ளனர்.


மேலும், நேர்காணலை முடிக்காமல் இருக்கும் ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் தடைப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட கருவூல அலுவலகத்தை தொடர்பு கொண்டு வருகின்ற செப்டம்பர் 30 ந் தேதிக்குள் நேர்காணலை முடிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களின் செல் எண்களையும் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.  


அதன் விவரம் வருமாறு,திருவள்ளுர் மாவட்ட கருவூலம் -  9566076082, சார் கருவூலங்கள் -  அம்பத்தூர்  - 9551634992, ஆவடி - 8190872590, கும்மிடிப்பூண்டி - 9629418704, பள்ளிப்பட்டு - 8667488388, பூந்தமல்லி - 9940102146, திருத்தணி -  9865481266, பொன்னேரி - 9787697632, திருவள்ளுர் - 9444474062, ஊத்துக்கோட்டை - 9489127875 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நேர்காணலை முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent