இந்த வலைப்பதிவில் தேடு

மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடிக்க கோரி வழக்கு

திங்கள், 19 செப்டம்பர், 2022

 



தமிழ்நாட்டில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் அமைக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்துவைத்தது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


பழைய பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பழைய பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் அமைக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் தொடர்ந்த வழக்கில் மதுரை கிளை நீதிபதி மகாதேவன் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent