இந்த வலைப்பதிவில் தேடு

காலாண்டு தேர்வு விடுமுறை 5 நாள் மட்டுமே

சனி, 17 செப்டம்பர், 2022

 



காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் 5 நாட்களுக்கு மட்டுமே அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ப ள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வுக்கான நாட்களை முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெரும்பாலான மாவட்டங்களில் செப்.22 முதல் 30ம் தேதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.22 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதையடுத்து, காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையை பொருத்தவரையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், பள்ளிக் கல்வித்துறை காலண்டரில் காலாண்டு விடுமுறை என்பது, அக்டோபர் 15ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கியதால் விடுமுறை குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent