அண்ணாவின் 114வது பிறந்த நாளில் பள்ளி மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இ ருந்தார். இந்த திட்டம் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி இந்த திட்டம் மதுரையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக நல அமைப்புகள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்து.
இது குறித்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா. தாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஏழை எளிய அடித்தட்டு மக்கள் படிக்கும் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அண்ணாவின் 114 வது பிறந்த நாள்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளதை தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. இந்த திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்று எங்கள் கூட்டணிசார்பில் விழுப்புரத்தில் நடந்த பொதுக்குழுவின் தீர்மானம் நிறைவேற்றினோம்.
இந்த கோரிக்கையை ஏற்று மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கியதற்கு லட்சோப லட்ச ஆசிரியர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்துவார் என்றும் நம்புகிறோம். இந்த திட்டத்தில் மாணவர்களின் பசிப் பிணி போக்கும் என்பதால் மாணவர்களின் பள்ளி வருகை மேலும் அதிகரிக்கும். ‘வயிற்றுக்கு சோறிட வேண்டும், இ்ங்கு வாழும் மனிதருக்கெல்லாம், பயிற்று பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளை பின்பற்றி மாணவர்களுக்கு பயிற்றுவித்து எண்ணும் எழுத்தும் வழங்கும் முதல்வருக்கு நன்றி.
முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்ததால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கூடி இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதில் படித்தவர்கள் பலர் அறிஞர்களாகவும் முன்னோடிகளாகவும் இருக்கின்றனர். அந்த திட்டத்தை மேலும் செழுமை படுத்தும் வகையில் காலையில் சிற்றுண்டி வழங்கும் வகையில் 1000 பள்ளிகளுக்கு 1லட்சம் பேர் பயனடையும் வ கையில் இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் அட்சய பாத்திரமாக விளங்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக