இந்த வலைப்பதிவில் தேடு

தங்கத்தின் விலை குறைந்தது

வியாழன், 1 செப்டம்பர், 2022

 




சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது.


எனினும், இம்மாத தொடக்கத்தில் நகை விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனையானது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.200உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினர்.


பின்பு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விலை மாற்றம் அடைந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent