இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - அமைச்சர் விளக்கம்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

 




தமிழ்நாட்டில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1044 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் இருப்பதாக அமைச்சர் விளக்கம் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் காய்ச்சல் பரவிவரும் சுழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இது  தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 


தமிழக முழுவதும் பொது சுகாதாரத் துறை சார்பில் இன்று 37 வது  கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது,  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடும் பணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பூஸ்டர் தடுப்பூசி இலவசம் தொடருமா அல்லது தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டு கொள்ள வேண்டுமா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் என கூறினார். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமைகளில் போடப்படும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent