வெகு சிலர் சாப்பிடாமல் வெயிலில் செல்வார்கள். அப்படி என்றால் உடனே தலைவலி நிச்சயம் வரும். தொப்பி அல்லது ஷால் அணிந்து கொண்டு செல்லலாம்.
ஆபீசிற்க்கு செல்லும் அவசரத்தில் பலரும் தலைக்கு குளித்துவிட்டு அப்படியே ஈரத்தலையுடன் சென்று விடுவார்கள். பெண்கள் சடை பின்னி கொண்டு செல்வதால் முடி காய்வதும் இல்லை.
இதனால் தலைவலி ஏற்படும். ஜலதோஷம் பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே காலையில் சற்று முன்னதாகவே குளித்து விட்டால் கிளம்புவதற்குள் தலை காய்ந்து விடும். இதன் மூலம் தலைவலியை தவிர்க்கலாம்.
அதிக வாசனை கொண்ட திரவியங்களை பூசினால், சிலருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும். எனவே இதை தவிர்க்க வேண்டும்.
தலைவலியை உடனே சரி செய்ய வெற்றிலையில் சாறு எடுத்து அதை கற்பூரம் சேர்த்து தலையில் தடவினால் தலைவலி நிச்சயம் குணமாகும்.
சிலர் உறக்கம் இல்லாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு தலைவலி வருவது சுலபம். ஆகவே அனைவரும் நிச்சயம் 8 மணி நேரம் உறங்க வேண்டும். அப்படி உறங்கி எழுந்தாலே தலைவலி குணமாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக