படுத்த உடனே சிலருக்கு தூக்கம் வரும். ஆனால் அதெல்லாம் கோடியில் ஒருவருக்கு தான் இப்பொழுது நடக்கிறது. தூக்கமின்மை காரணமாக உடலில் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அப்படி இருக்க நாம் அடுத்த உறங்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது கூட நமக்கு உறக்கம் வராது. அப்படி உறக்கத்தை உடனே பெற சில வழிமுறைகளை பின்பற்றினால் பலன் கிடைக்கும். உணவில் கசகசா எடுத்துக் கொள்ளலாம்.
இதனால் நிம்மதியான உறக்கம் வரும். அன்றாடம் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வதால் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். இந்த கசகசா ஒரு ஸ்பூன், அத்துடன் 10 பாதாம், ஐந்து மிளகு, இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வானலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நாம் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து ஒரு ஸ்பூன் போட்டு வதக்க வேண்டும்.
அதன் பின் ஒரு டம்ளர் பாலை அதில் ஊற்றி கொதிக்க வைத்து அதில் நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடணும். 20 நிமிடங்கள் ஊறவிட்டு அதை குடிக்க வேண்டும்.
பின்னர், பால் மிதமான சூட்டில் இருக்கும் போது உணவு சாப்பிட்ட பின் 20 நிமிடங்கள் கழித்து உறங்க செல்லலாம். இவ்வாறு அன்றாடம் குடித்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, உறக்கமும் சீக்கிரம் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக