இந்த வலைப்பதிவில் தேடு

இரவு நேரத்தில் இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் அவ்வளவுதான்.. உஷார்.!

வியாழன், 27 ஏப்ரல், 2023

 




நமது உணவு பழக்கம் தான் நம் வாழ்க்கை முறையை, ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. எந்த உணவை எப்போது சாப்பிடுகிறோம் என்பது மிக மிக முக்கியமானது. அந்த வகையில் இரவு நேரத்தில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பார்க்கலாம்.


இரவு 7 மணிக்கு மேல் உணவு சாப்பிடுவதை தவிர்க்கச் சொல்லி பலரும் தெரிவிக்கின்றனர். காலை அல்லது மதியம் மட்டும் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது. இதனால், உடலில் கபம் மற்றும் பித்தம் அதிகரிக்கக்கூடும். தயிரில், புளிப்பு இனிப்பு இருக்கிறது. எனவே சளி, இருமல், மலச்சிக்கல் உள்ளிட்டவற்றை இது ஏற்படுத்தும். 


இரவு நேரத்தில் கோதுமையை சாப்பிடக்கூடாது. ஏனெனில், கோதுமை உணவு ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் இரவு நேரத்தில் கோதுமையை சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை ஏற்படும். 


இரவில் பச்சை காய்கறிகள், பச்சை சாலட்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு பதிலாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடலாம். இரவில் செரிமானம் குறைவாக இருக்கும் என்பதால் செரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 


மைதா உணவை அதிகம் சாப்பிடவே கூடாது என்றுதான் கூற வேண்டும். இதை ஸ்வீட் பாய்சன் என்று கூட நிபுணர்கள் கூறுவார்கள் எவ்வளவு ருசியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடியது. இதை இரவு நேரத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாது. 


உப்பு அதிக சோடியம் கொண்ட உணவுகளை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். இரவு 7 மணிக்கு பின் அதிக உப்பை சாப்பிடுவது நமது ரத்த நாளங்கள் மற்றும் இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent