இந்த வலைப்பதிவில் தேடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

வெள்ளி, 7 அக்டோபர், 2022

 



வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


அந்த அறிக்கையில், திறந்தவெளியில் உள்ள கிணறுகள், இடியும் நிலையில் உள்ள சுவர்கள் ஆகியவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக இருப்பதை உறிதி செய்ய வேண்டும்.


பள்ளி வளாகங்களில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும். மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


பழுதடைந்த கட்டங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent