இந்த வலைப்பதிவில் தேடு

TET தேர்வர்கள் ஆர்ப்பாட்டம் - போட்டி தேர்வு இன்றி நியமனம் தேவை!

செவ்வாய், 4 அக்டோபர், 2022

 




ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை, போட்டி தேர்வு இன்றி அரசு பள்ளி ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தி, பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தகுதி தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, புதிதாக நியமன தேர்வு ஒன்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என, தமிழக பள்ளிக் கல்வி துறை அறிவித்தது.


இந்த உத்தரவை எதிர்த்தும், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்பக் கோரியும், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த பட்டதாரிகள், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாநிலம் முழுதும் இருந்து, நுாற்றுக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்றனர். பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.


கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தேர்ச்சி மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பணி நியமன போட்டி தேர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் இடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக நியமன நடவடிக்கையை கைவிட வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent