திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் : 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
பொருள்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், இறைவனின் திருவடிகளை தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
பழமொழி :
Diligence is the mother of good fortune
முயற்சி திருவினையாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன்.
2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.
பொன்மொழி :
உலகின் எந்த கோடீஸ்வரனாலும் தன் கடந்த காலத்தை வாங்க முடியாது. எனவே ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் சந்தோசமாக இருங்கள் ...அன்னை தெரேசா
பொது அறிவு :
1. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது?
ஜூன் 5 .
2. பப்பாளி பழத்தின் தாயகம் எது?
மெக்சிகோ.
English words & meanings :
acou-stic - relating to sound or the sense of hearing. dogs have a much greater acoustic range than humans". Adjective. செவிப்புலன் சார்ந்த. பெயரளபடை
ஆரோக்ய வாழ்வு :
கேரட்டை பச்சையாக சாப்பிடும்போது, அதன் நார்ச்சத்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனுடன் பிணைக்கிறது மற்றும் உடலில் இருந்து அதை இழுக்க உதவுகிறது. இது முக்கியமானது, ஏனெனில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் முகப்பரு, மனநிலை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு ஹார்மோன் இடையூறுகளுக்கு வழிவகுக்கும்
அக்டோபர் 10
உலக மனநல நாள்
உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.[1] இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.[2][3] ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.
நீதிக்கதை
முரசு சத்தம்
பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது.
நீதி :
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
இன்றைய செய்திகள் - 10.10.2022
* சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
* குறைந்த நீர்வரத்து: வைகை, முல்லைபெரியாறு அணைகளில் நீர் திறப்பு குறைப்பு.
* மது அருந்திய நிலையில் ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
* டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதை அடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
* இந்திய விமானப்படைக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆரம்பக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.
* கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு.
* குண்டுவீச்சு காரணமாக ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் சேதம்.
* பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து இந்திய அணி 4-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதிக்கும் தகுதி பெற்றது.
* உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வெற்றி.
Today's Headlines
* Minister KN Nehru has said that 85 percent of the rainwater drainage works in Chennai have been completed.
* Low water flow: Reduction of water opening in Vaigai and Mullaperiyar dams.
* Rapid Transport Corporation Managing Director K. Ilangovan has warned that strict disciplinary action will be taken if drivers and other employees are found to be working under the influence of alcohol.
* Due to unprecedented rains in Delhi, people are suffering due to waterlogged roads.
* Air Chief Marshal VR Chaudhary has said that 3,000 Agni soldiers will be selected for the Indian Air Force by December and they will be given initial training.
* Earthquake in Greece: 5.1 on the Richter scale.
* Damage to bridge connecting Russia to Crimea due to bombing.
* Team India tasted their 4th win and qualified for the semi-finals of the Women's Asia Cup cricket tournament after defeating Bangladesh in the league match.
* Indian player Pankaj Advani won the title of 'Champion' in the World Billiards Tournament.
* ISL Bengaluru team won the football match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக