இந்த வலைப்பதிவில் தேடு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

செவ்வாய், 29 நவம்பர், 2022

 



தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதுபோல, தமிழகம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


6, 8, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent