இந்த வலைப்பதிவில் தேடு

கிரகணம் 2022 - கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கை - இந்த 5 விஷயங்களை மறக்க வேண்டாம்

செவ்வாய், 8 நவம்பர், 2022

 



நேரடியாக சூரியன் சந்திரன் ஒளியை விட கிரகணத்தின் ஒளி நம் மீது படும் பொழுது அது வேறு விதமான, எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும்.


கிரகணம் என்பது அறிவியல் ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் பல முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. கிரகணம் ஏற்படும் பொழுது சூரியன் மற்றும் சந்திரனை நாம் நேரடியாக பார்க்க கூடாது. நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. கிரகணம் ஏற்பட போகிறது என்றாலே அதற்கு பலவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் பாரம்பரியமான நம்பிக்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். குறிப்பாக சந்திர கிரகணம் ஏற்படும் போது, கர்ப்பிணிகள், சிசுக்கள் மற்றும் இளம் குழந்தைகள் ஆகியோர் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இவர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.


கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று. காலமாக சொல்லப்பட்டு வருகிறது. நவம்பர் 8 ஆம் தேதி வரும் சந்திர கிரகணம் பாதிக்காமல் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.


கிரகணங்கள் எவ்வளவு ஆபத்தானது


ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி ஆகும். அதேபோல சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இவ்வாறு ஒவ்வொரு முறை மாறும் போதுமே அந்த ராசியினருக்கு ஏற்றவாறு தாக்கங்கள் தெரியும். கிரகணத்தின்போது சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி நேரடியாக நமக்கு பிரதிபலிக்காமல் மறைக்கப்படுவதால் அது ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெவ்வேறு நாடுகளிலும், பல கலாச்சாரங்களிலும், பல சமூகங்களிலும், கிரகணத்தின் பாதிப்பைத் தடுப்பதற்கு பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது.


கிரகணம் கர்ப்பிணிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய கருத்துகள்


சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்று எதுவாக இருந்தாலுமே அது கர்ப்பிணிகளை மோசமாக பாதிக்கும் என்று நம்பிக்கை இருந்து வருகிறது. தனக்காக மட்டுமல்லாமல் தன்னுடைய குழந்தைக்காகவும் கர்ப்பிணிகள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கைக்கு பொதுவான அறிவியல் பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை என்றாலும் கர்ப்பகால நம்ப காலத்தில் கிரகணம் ஏற்படும் பொழுது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறுகிறார்கள்.


நேரடியாக சூரியன் சந்திரன் ஒளியை விட கிரகணத்தின் ஒளி நம் மீது படும் பொழுது அது வேறு விதமான, எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும். எனவே, இது கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தை உண்டாக்கும். இதனால் முன்கூட்டியே குழந்தை பிறக்கக்கூடிய ஆபத்தும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலர் இது எல்லாம் கட்டுக்கதை என்று கூறினாலும் தற்போது வரை கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கிரகண நேரத்தில் பெண்கள் என்ன செய்யலாம், செய்யக்கூடாது


அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றால் கூட கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் பின்வருவனற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.


* கிரகண நேரத்தில், அதற்கு ஓரிரு மணிநேரங்கள் முன்னும் பின்னும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்


* கிரகணம் ஏற்படும் போது எதுவும் சாப்பிட வேண்டாம் அல்லது குடிக்க வேண்டாம்


* கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும்


* வீட்டில் இருந்தாலும், கிரகண நேரத்தில் அதன் ஒளி / தாக்கம் தெரியாதவாறு கதவு ஜன்னல்களை மூடி விடுங்கள்


* கிரகணம் முடிந்த பிறகு குளிக்க வேண்டும்


கட்டுக்கதைகள், நம்பிக்கைகள் மட்டுமே என்று கூறினாலும், கர்ப்ப காலத்திலும், கருவில் வளரும் சிசுவிற்கும் எந்த ஆபத்தும் நேராமல் இருக்க இதையெல்லாம் செய்யலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent