இந்த வலைப்பதிவில் தேடு

28 லட்சம் பார்வையாளர்களை பெற்ற அரசு பள்ளி மாணவி நடன Video

புதன், 14 டிசம்பர், 2022

 



பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் கலை பண்பாட்டு திருவிழாவில் பாடல் படியும், நடனம் ஆடியும் அசத்திய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாணவியின் நடன வீடியோ இணையத்தில் 28 லட்சம் பார்வைகளை கடந்து கவனம் ஈர்த்துள்ளது.


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் அனைத்து பள்ளிகளிலும் கலை பண்பாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


வயலோகம் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஆர்த்தி கலை பண்பாட்டு திருவிழாவில் பங்கேற்று நடனம் ஆடியும், பாடல் பாடியும் அசத்தி இருக்கிறார். மாணவி ஆர்த்தி நடனம் ஆடுவதையும், பாடல் பாடுவதையும் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அந்த காணொலிகள் 28 லட்சம் பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


மாணவியின் அட்டகாசமான நடனத்தை ஏராளமானோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், தற்போது நடைபெற்று வரும் கலை பண்பாட்டு திருவிழாவில் முதல் இரண்டு சுற்றுகளையும் முடித்துள்ள மாணவி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். தமிழக அரசு மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்த இதுபோன்ற கலை திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று மாணவி ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தன் திறமையின் மூலம் பல்வேறு சாதனைகளை எதிர்காலத்தில் நிகழ்த்துவேன் என மாணவி நம்பிக்கை தெரிவித்தார்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent