இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே மோதல் - மாணவருக்கு கத்திக்குத்து

செவ்வாய், 6 டிசம்பர், 2022

 



களக்காடு அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


பின்னர் அது இரு தரப்பு மோதலாக வெடித்தது. இதை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன், இன்று பள்ளிக்கு கத்தியுடன் வந்ததுடன் மற்றொரு தரப்பு மாணவரான இசைச் செல்வன் என்பவரின் முதுகில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் இசைச்செல்வன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.


இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த களக்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட கல்வி அதிகாரியும் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்த உள்ளார்.


களக்காடு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent