இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 07.12.2022

புதன், 7 டிசம்பர், 2022

 



திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை


குறள் : 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.


பொருள்:

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்


பழமொழி :

Where there is anger, there may be excellence.

கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 

2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்


பொன்மொழி :

எல்லாப் பதில்களையும் தெரிந்து கொள்வதை விட, சில கேள்விகளை தெரிந்து கொள்வது சிறந்தது. --ஜேம்ஸ் தர்பர்


பொது அறிவு :

1. உலோகம் சாராத கனிமம் எது? 

ஜிப்சம் . 


2. தீப்பற்றாத மரம் எது? 

செம்மரம்.


English words & meanings :

cereal - a breakfast food. noun. ஒரு வகை காலை உணவு. பெயர் சொல். serial - sequential. தொடர்கதை. noun. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

ஒரு முட்டையில் துத்தநாகத்துடன் நல்ல அளவு வைட்டமின் பி 6 மற்றும் பி 12 உள்ளன. அவை 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், அவை காய்ச்சல் மற்றும் குளிர்ச்சிக்கு எதிராக போராட உதவுகின்றன. முட்டை வைட்டமின் டி இன் நல்ல மூலமாக இருப்பதால், உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் உதவும்.


NMMS Q

சூரிய மின்கலம் ஒளி ஆற்றலை ___________ ஆற்றலாக மாற்றுகிறது. 

a) வேதி. b) மின். c) வெப்ப d) ஒலி.


 விடை: மின்


டிசம்பர் 07 இன்று

கொடி நாள் (இந்தியா) 




கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.


நீதிக்கதை

மலைப்பாம்பும் மான் குட்டியும்


ஒரு நாள் மான்குட்டி ஒன்று தனது தாய்க்காக நாவல் பழங்களை பறிக்க ஆற்றை கடந்தது. அப்போது அங்கு குறட்டி என்ற பெயரைக்கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அது இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும். அது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் கொண்டது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது மிக கடினம். 


மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும். 


ஆனால் குறட்டி வித்தியாசமாக காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில் நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி ஆற்றங்கரையையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டியைப் பார்த்தது. மான்குட்டி தனது பக்கமாக வரும்வரை காத்திருந்தது. மானும் ஆற்றைக் கடந்து குறட்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. மானை குறட்டி சுற்றிக்கொண்டது. அம்மா என்று கதறியது மான்குட்டி. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது. பாவமாக இருந்தது. 


மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் தப்பிக்க போராட்டம் நடத்தும். மான் குட்டியைப் பார்த்து, நீ ஏன் அழுகிறாய் என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு எப்படியும் நான் சாகுவது உறுதி. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் எனக்கு உதவுங்கள் என்றது மான். நான் எப்படி உதவ முடியும்? என்றது. 


மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு நான் வருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியேன்றால் நீ என் கூடவே வா... நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு. 


உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன? என்றது குறட்டி. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டு மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது. 


நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி. நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடிய மான் குட்டி தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது. 


குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களில் மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விடுமே என்று நினைத்தது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக்கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர்ந்தது. 


அதே மான்குட்டி தனியாக வந்தது. என் கடமை முடிந்தது. எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன். உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது. 


எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னை கொன்று தின்னப்போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்? நீ சொன்னது சரிதான்... ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?


குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி, குறட்டி அதனை உயிரோடு விட்டுச்சென்றது. 


நீதி :

எப்போது மற்றவருக்கு உதவும் குணம் இருத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள் - 07.12.2022


* அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல்: சென்னை நெரிசலைக் குறைக்க வருகிறது நுண்ணறிவு போக்குவரத்து திட்டம்.


* கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப்-3ஏ தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


* மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை புயலாக வலுவடையக்கூடும் என்பதால், தமிழகத்தில் 9-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அன்றைய தினம் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


* ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்  தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.


* கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வக விஞ்ஞானி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.


* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரிஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக்: மின்சார வாரிய அணி வெற்றி.


* 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கியது இந்தியா.


Today's Headlines

* Adaptive traffic signal: Intelligent traffic scheme coming to reduce congestion in Chennai.


*  The Madras High Court has directed the Tamil Nadu Department of School Education and Higher Education to re-examine the teacher appointment procedures in three months so that only educated people can be appointed directly to the educational institutions.


*  The Tamil Nadu Public Service Commission has announced that the Group-3A examinations will be conducted at the examination centers in 15 districts of Tamil Nadu.


*  The Chennai Meteorological Department has warned that there is a possibility of very heavy rain in Tamil Nadu on the 9th as the deep depression moving in the west-northwest direction may intensify into a storm this evening.  A red alert was issued for many districts on that day.


 * The meeting of representatives from G20 member countries began in Udaipur, Rajasthan.  On the first day of the meeting, discussions were held on important issues including technology transfer.


 * A Wuhan laboratory scientist in China claims in his new book that the coronavirus was created by humans.


*  Former player Rishikesh Kanitkar has been appointed as the batting coach of the Indian women's cricket team.


* 1st Division Hockey League: Power Board Team Win.


* India has backed up its bid to host the 2027 Asian Cup football tournament.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent