இந்த வலைப்பதிவில் தேடு

மின்இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு - பிப்.15 வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

செவ்வாய், 31 ஜனவரி, 2023

 



மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,  தமிழ்நாட்டில் 2.44 கோடி மின்இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது. 


90.69 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 2.38 கோடி வீடுகளுக்கான மின்இணைப்பில், 2.17 கோடி வீடுகளின் மின்இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டது. 23.28 லட்சம் விவசாயிகளில் 18.28 லட்சம் விவசாயிகள், மின்இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பொதுமக்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். ஒரு மின்இணைப்புடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை இணைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


ஒரு ஆதார் எண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15க்கு பிறகு கால அவகாசம் வழங்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent