இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 05.01.2023

புதன், 4 ஜனவரி, 2023

 



திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 99

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது


பொருள்:

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?


பழமொழி :

Action speaks louder than words.

சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.


இரண்டொழுக்க பண்புகள் :

1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.

2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :

உண்மையான மதிப்புமிக்க விடயம் உள்ளுணர்வு மட்டுமே. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


பொது அறிவு :

1. திருக்குறள் எவ்வகை நூல்களுள் ஒன்று ? 

பதினென் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று


 2. வில்லியம் மார்கன் கண்டுபிடித்த விளையாட்டு எது? 

வாலிபால்.


English words & meanings :

forth - going forward, adverb. முன்னோக்கி செல்லுதல். வினையுரிச் சொல். fourth - number four. noun. எண் நான்கு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் இருமல், தொண்டைவலி குணமாகும்.


NMMS Q

நெகிழிப் பணம் என்பது_______. 


விடை: பற்று அட்டை. விளக்கம்: பற்று அட்டை என்பது, வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தானியங்கி இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது, பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை வழங்குவது போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டையாகும்.


நீதிக்கதை


நேரம் தவறாமை


சுனில், ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்து, அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.


சுனில், அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுனில் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுனில் தான் சாப்பிட்டு கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான். காகம் வேகமாக ஓடி வந்தது.


வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுனில்க்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.


இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுனில் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான்.


காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுனில் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுனிலின் அருகில் வந்தது. சுனிலின் கையை ஆவலோடு பார்த்தது.


சுனில் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுனில் காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது.


சுனிலும் காகமும் நண்பர்களானார்கள். சுனில் சொல்வதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும். சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுனில் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத, ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது.


சுனில் வியந்தான். தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுனிலை அனைவரும் பாராட்டினார்கள்.


இன்றைய செய்திகள் - 05.01.2023


* மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து ஆவின் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


* தமிழகத்தில் புதிதாக 92,721 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 11.5 சதவீதம் அதிகமாகும்.


* ஆசிரியர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்க அனுமதி: வழிமுறைகள் வெளியீடு.


* தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.16 கோடியில் ஜிம்னாசியம், ஓடுதளம்: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.


* தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு ரூ.19,744 கோடி நிதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.


* அக்னி பாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 6 மாத பயிற்சி தொடக்கம்.


* ஐ.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பு நாடுகளாக 5 நாடுகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவற்றில் 2 நாடுகள் முதன்முறையாக இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன.


* மெகிவ்வா நகரில் ரஷ்யாவின் ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 89 பேர் பலியாகினர்.


* இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


* அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், மெட்விடேவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* In Madurai Aavin 47 people's appointment was cancelled by Aavin MD due to the malpractice in their appointments.


* In TN 92,721 people were affected by tuberculosis. This is 11.5% more than the previous year. 


* Teachers can participate in competitive exams. A guide line was released


* In TN sports University a gymnasium and a running ground was built worth of 16 crores. CM inaugurate it through conference call. 


* The Union Cabinet has approved the allocation of Rs. 19,744 crore for the National Green Hydrogen Initiative. 


* 6 months training for soldiers who got selected under the scheme Agni Bath. 


* In UN's Security Council 5 nations today take oath as temporary members out of the 5 for 2 countries it is a first time. 


* 89 Russian Soldiers were killed in an attack by Ukraine on a Russianilitary base in the city of Megivva. 


* India won the first T20I against Sri Lanka by 2 runs. 


* Adelaide International Tennis : Fjokovic, Medvedev advanced to 2nd round.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent