திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தை சுற்றி அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் சுப்பிரமணிய சாஸ்திரியர் ஆகிய மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இங்கு, நேற்று நடந்த செய்முறை தேர்வு பயிற்சிக்கு வந்த பிளஸ் 2 மாணவர்கள் சிலர் தலை முடியை சரியாக வெட்டாமலும், முகத்தில் தாடி ஷேவ் செய்யாமலும் வந்தனர்.
அவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆசிரியர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஷேவ் செய்ய பணம் இல்லாததால் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கையில் வைத்திருந்த பணத்திற்கு ஷேவிங் செட் ஒன்று வாங்கி வந்து, ஆரணி எல்எல்ஏ அலுவலகம் பின்புறம் சென்ற மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாடியை ஷேவ் செய்து கொண்டு, அவசர அவரமாக பள்ளிக்கு சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக