இந்த வலைப்பதிவில் தேடு

ஆர்க்கிடெக்ட் ஆக ஆசையா? எழுதுங்கள் நாட்டா (NATA)

புதன், 15 மார்ச், 2023

 



இந்திய அரசின், ஆர்க்கிடெக்ட்ஸ் சட்டம், 1972ன் படி ஏற்படுத்தப்பட்ட ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ இத்தேர்வை நடத்துகிறது.



படிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)


கல்வி நிறுவனங்கள்: பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என இந்தியாவில் ஆர்க்கிடெக்சர் படிப்பை வழங்கும் 465 கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ‘நாட்டா’ மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது.


தகுதிகள்:  12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு முறை: மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேர கால அவகாசத்துடன் இத்தேர்வு நடத்தப்படுகிறது. 



125 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் லாஜிக்கல் ரீசனிங், நியூமெரிக்கல் ரீசனிங், வெர்பல் ரீசனிங், இன்டக்டிவ் ரீசனிங், சுட்சுவேஷனல் ரீசனிங், அப்ஸ்டேரக்ட் ரீசனிங் ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் அப்ஜெக்டிவ் வடிவில், கேள்விகள் இடம்பெறும். ஆன்லைன் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.


இத்தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில், பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நம் நாட்டில் ’ஆர்க்கிடெக்ட்’ ஆக செயல்பட முடியும்.


பல்வேறு காரணங்களால், குறிப்பிட்ட நாளில் முதல் தேர்வை எழுத முடியாதவர்கள் அல்லது முதல் தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட, அதிக மதிபெண் விரும்பும் நோக்கில் மீண்டும் இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்களுக்காக, இந்த ஆண்டு மூன்று முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.



விண்ணப்பிக்கும் முறை:  நாட்டா தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் வயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு தேதி விரைவில் வெளியிடப்படும்.


நாட்டா 2023 தேர்வு தேதிகள் அறிவிப்பு

  • முதல் தேர்வு நாள்: ஏப்ரல் 22
  • இரண்டாம் தேர்வு நாள்: மே 28
  • மூன்றாம் தேர்வு நாள்: ஜூலை 9


ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளில் தேர்வு நடைபெறும்.


மேலும் விபரங்களுக்கு: 

www.nata.in மற்றும் www.coa.gov.in  என்கிற இணையதளங்களை காணவும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent