இந்த வலைப்பதிவில் தேடு

கறிவேப்பிலையை நீங்க இப்படி சாப்பிட்டா போதுமாம்... உங்க இரத்த சர்க்கரை அளவு டக்குனு குறையுமாம்!

புதன், 12 ஏப்ரல், 2023

 





பொதுவாக தென்னிந்திய உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது.


எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் எண்ணெயிலும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்திலும் கறிவேப்பிலை அதிகமாக பயன்படுத்ததப்படுகிறது.


பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை நம் ஆரோக்கியத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்களைத் தடுக்க உதவுவது வரை உங்களுக்கு பல்வேறு நன்மைகளை இது வழங்குகிறது.


இதய நோய்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் வீக்கம் போன்ற சுகாதார நிலைமைகளை நிர்வகிப்பதோடு, உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த மூலிகையாக இருக்கும் கறிவேப்பிலையை மருத்துவரின் ஆலோசனை பெயரில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.



கறிவேப்பிலை உயர் இரத்த சர்க்கரை அளவை 45 சதவிகிதம் குறைப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நிலைநிறுத்த உதவுவதோடு, நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க கறிவேப்பிலை உதவுகிறது.


கறிவேப்பிலையில் வைட்டமின், பீட்டா கரோட்டின் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களின் ஆக்ஸிஜனேற்ற சேதத்துடன் தொடர்புடைய பல நோய்களைத் தடுக்கின்றன. அந்த பட்டியலில் வகை 2 நீரிழிவு நோய் முதலிடத்தில் உள்ளது.


கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் விரைவாக வளர்சிதை மாற்றமடைய உதவுகிறது. இதனால், உங்கள் உடல் எடையும் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். கறிவேப்பிலை உங்கள் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க முனைகிறது மற்றும் உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்தும் போது, இரத்த சர்க்கரை அளவு சீராகும்.



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாவுச்சத்து முதல் குளுக்கோஸ் முறிவு விகிதத்தை குறைக்கும் கலவைகள் இதில் உள்ளன. இதனால், இரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவை இது கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?


காலையில் எட்டு முதல் 10 புதிய கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது கறிவேப்பிலையை சாறு செய்து தினமும் காலையில் குடிக்கலாம். கறிகள், அரிசி உணவுகள் மற்றும் சாலட்களில் அவற்றைச் சேர்த்து அவற்றின் நன்மைகளை முழுவதுமாக பெறலாம்.


கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மருத்துவரின் பரிந்துரைப்படி, கறிவேப்பிலையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த இலைகள் மற்றும் மருந்துகளை ஒரே நேரத்தில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைக்க உதவலாம்.


மறுப்பு: இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. சரியான தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் சொந்த மருத்துவரை அணுக வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent