இந்த வலைப்பதிவில் தேடு

கேஸ் சிலிண்டர் புக்கிங் ரொம்ப ஈசி.. வாட்ஸ் அப் போதும்... விவரம் இதோ !

புதன், 12 ஏப்ரல், 2023

 





இன்றைய காலகலட்டத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட்டின் பயன்பாடு அதிகரித்த நிலையில் பலரும் ஆடம்பர தேவைகளிலிருந்து அடிப்படை சேவைகள் வரை தங்களின் மொபைல் மூலமாகவே பெற விரும்புகிறார்கள்.


அந்த வகையில் Indane, Bharat Petroleum, HP Gas வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை தங்களின் வாட்ஸாப் மூலமாகவே முன்பதிவு செய்யலாம். அதை எப்படி செய்வது என்ற வழிமுறைகளை இந்த தொகுப்பு மூலம் அறியலாம்.


ndane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். முதலில் இந்த எண்ணை தாங்கள் பதிவு செய்துள்ள போனில் சேமித்து கொள்ளவும். பின்னர் வாட்ஸ்அப்பில் 'Book' அல்லது 'Refill' என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும். இந்த மெசேஜிற்கு 'தங்களின் ஆர்டர் பெறப்பட்டது' என்ற பதிலைப் பெறுவீர்கள். அத்துடன் சிலிண்டர் டெலிவரி செய்யும் தேதியும் உங்களுக்கு மெசேஜ் மூலம் வரும்.



அதேபோல நீங்கள் HP கேஸ் வாடிக்கையாளராக இருந்தால், 92222 01122 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இந்த எண்ணிற்கும் வாட்ஸ்அப்பில் 'Book' அல்லது 'Hi' என மெசேஜ் அனுப்பவும். அப்படி அனுப்பினாலே உங்களுடைய சிலிண்டர் பதிவு செய்யப்படும்.


நீங்கள் Bharat Petroleum சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தால், 1800224344 என்ற எண்ணிற்கு 'Hi' என மெசேஜ் அணுப்பினாலே உங்களுடைய சிலிண்டர் புக் செய்யப்படும்.


அதுமட்டுமின்றி Paytm, PhonePay, Google pay மூலமாகவும் சிலிண்டரையும் முன்பதிவு செய்யலாம். இதிலும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது கைபேசி எண்ணை மட்டும் உள்ளிடவும். கிரெடிட் கார்டு மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்புவோர் சலுகைகளை சரிபார்த்து அந்த தளத்தின் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent