இந்த வலைப்பதிவில் தேடு

இந்த ஒரு டீ-யை குடிச்சா போதுமாம்... உங்க தொப்பை கொழுப்பு குறைவதோடு பிபி-யும் குறையுமாம் தெரியுமா?

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

 




கோடைகாலங்களில் கிடைக்கும் சில பருவ காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்கின்றன.


அந்த வகையில், உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் முருங்கையை பற்றியும் அதன் டீயின் நன்மைகளை பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.


தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முருங்கையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கை பூ என முருங்கையின் அனைத்திலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. முருங்கைக்காய் சாம்பார் மற்றும் குழம்பு, முருங்கை இலை, பூ பொரியல் மற்றும் முருங்கை சூப் ஆகியவை மக்கள் அடிக்கடி செய்யும் பிரபலமான உணவு விருப்பங்களாகும்.


ஆனால், நீங்க முருங்கை தேநீரை குடித்திருக்கிறீர்களா? முருங்கை மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் இப்போது பிரபலமான பானமாக அனைவராலும் உட்கொள்ளப்படுகிறது. இந்த தேநீரின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.



தொப்பை கொழுப்பு


பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கும் முருங்கை தேநீர், உங்கள் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவுகிறது. இந்த தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது முதன்மையாக பாலிபினால்கள் அல்லது தாவர கலவைகளை கொண்டிருக்கின்றன.


மேலும், இந்த தேநீர் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, கொழுப்புச் சேமிப்பிற்குப் பதிலாக ஆற்றலை உடலில் சேமிக்கிறது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தி கொண்டவையாக உள்ளன. அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு மாற்றாக முருங்கை டீ-யை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.


இரத்த அழுத்தக் கட்டுப்பாடு


முருங்கை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் முருங்கை தேநீர், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் க்வெர்செடின் என்ற பொருள் இதிலுள்ளது. கூடுதலாக, இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதன் ஆக்ஸிஜனேற்ற திறன் காரணமாக வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் முருங்கை இலை தேநீர் உதவும்.


இரத்த சர்க்கரை கட்டுப்பாடு


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கை இலை நல்ல உணவு. ஏனெனில் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் சி நிறைந்த முருங்கை இலை தேநீர், வகை -2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.


கொலஸ்ட்ரால் அதிகரிப்பை தடுக்கிறது



கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், முருங்கை இலை தேநீர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம் இதய நோய்களின் அபாயங்களைக் குறைக்கலாம்


அழகு நன்மைகள்


முருங்கையின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற திறன்கள், உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் உங்கள் தோல் மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுகளை வெளியேற்றவும், உங்கள் சருமத்தை பொலிவாகவும் உதவுகின்றன. மேலும், முருங்கை இலை உங்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.


வீட்டில் முருங்கை டீ தயாரிப்பது எப்படி?


முருங்கை பொடி ஆன்லைனிலும் மளிகைக் கடைகளிலும் பரவலாகக் கிடைக்கிறது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து 2 டீஸ்பூன் முருங்கை இலை பொடியை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் வடிக்கட்டி, இந்த தேநீரை குடிக்கலாம்.


இருப்பினும், கடைகளில் விற்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொடிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் வீட்டிலேயே முருங்கை பவுடரை தயார் செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு கப் முருங்கை இலைகளை எடுத்து, அவற்றை நன்றாக காயவைத்து நீரிழப்பு செய்ய வேண்டும். பின்னர் அவற்றை பொடியாக அரைத்து, தேவைப்படும்போது தேநீராக தயாரித்து குடிக்கலாம்.


மாற்றாக, முருங்கை தேநீர் தயாரிக்க இலைகளை சுத்தம் செய்து சில நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். உங்களுக்கு நாட்பட்ட சுகாதார நிலைகள் ஏதேனும் இருந்தால், இந்த டீயை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன், நீங்கள் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent