இயற்கையில் நாம் சாப்பிடும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உண்டு. அந்த வகையில் திராட்சை பழத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன.
அந்த வகையில் திராட்சை பழம் சாப்பிட்டால் பல நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும். திராட்சைப்பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது.
திராட்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடுவதால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
திராட்சை பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் ஏனென்றால் இதில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது ஆனால் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
திராட்சை பழத்தில் உள்ள லிமோனன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்டது. எனவே தினமும் திராட்சைப்பழம் சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
திராட்சைப் பழத்தில் வைட்டமின் ஈ உள்ளதால் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் திராட்சை பழத்தை சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக