இந்த வலைப்பதிவில் தேடு

கண்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்

புதன், 12 ஏப்ரல், 2023

 





கண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள்: நீரிழிவு என்பது தற்போது உலக அளவில் மிகப்பெரிய நோயாக உருவெடுத்து வருகிறது.


இது கட்டுப்பாடற்ற உயர் இரத்த சர்க்கரை அளவுகளால் ஏற்படுகின்றது. இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதன் காரணமாக இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன (டைப் 1 மற்றும் டைப் 2).


டைப் 1 நீரிழிவு நோய், ஒரு ஆட்டோஇம்யூன் நோயாகும். இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. டைப் 2 நீரிழிவு என்பது உடல், உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை எதிர்க்கும் அல்லது இன்சுலின் இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்த போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத ஒரு நிலையாகும்.


ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால் உடலில் பல அறிகுறிகள் தோன்றும். அதில் பிரத்யேகமாக கண்களில் சில அறிகுறிகள் உருவாகும். சர்க்கரை நோய் கண்களில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றை கட்டுப்படுத்தாமல் விட்டால் அது பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். சர்க்கரை நோயின் அறிகுறிகளை கண்கள் மூலம் எப்படிக் கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



கண்களில் காணப்படும் நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்


- மங்கலான பார்வை

- அடிக்கடி அல்லது நாளுக்கு நாள் ஏற்படும் பார்வை மாற்றங்கள்

- பார்வை கோளாறு

- நிறங்களைப் புரிந்து கொள்ளவோ ​​அல்லது அடையாளம் காணவோ முடியாமல் போவது

- புள்ளிகள் அல்லது இருண்ட சரங்கள் (இவை ஃப்ளோடர்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன)

- ஃபிளாஷ் ஒளி

- கண்களின் மூலையில் அசௌகரியம்.


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி


நீரிழிவு நோயால் கண்களில் தென்படும் அறிகுறிகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல் மற்றும் பார்வையில் ஏதேனும் மாற்றங்களைக் கண்காணிப்பது ஆகியவை அவசியமாகும்.



நீரிழிவு நோயால் கண்களில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த சில வழிகள் இதோ:


- இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவும்

- அடிக்கடி கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

- பார்வையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்

- உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும்.

- சத்தான உணவை சாப்பிட்டு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்


( பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent