தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ளது மூத்தாகுறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் உள்ளனர். தற்போது தமிழத்தின் பல பகுதிகளில் முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் படித்த பள்ளிக்கு தங்களால் இயன்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி சிவகாசி https://youtu.be/rr6lwj-PQqE உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில் மூத்தாகுறிச்சி பள்ளியில் பயின்று தற்போது லண்டனில் தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் மாணவி வளர்மதி, தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஈடாக அரசு பள்ளிகளின் தரமும் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும்,அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும்,
மாணவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்தும் நோக்கில் தினமும் இணைய வழி மூலமாக ஸ்போக்கன் இங்கிலிஷ் என்னும் ஆங்கில வகுப்பை எடுத்து வருகிறார்.
பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து லண்டனில் வசிக்கும் முன்னாள் மாணவி வளர்மதி கூறுகையில்,
தங்கள் ஊர் கிராம மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் முடியும் என்ற தாரக மந்திரத்துடன் இப்பணியை செய்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் இது தன்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக