இந்த வலைப்பதிவில் தேடு

பதவி உயர்வு கவுன்சிலிங் ஆசிரியர்கள் அதிருப்தி

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

 

பள்ளிக்கல்வி துறையில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்துள்ள நிலையில், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் அறிவிக்காததால், அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.


தமிழக அரசு பள்ளிகளில் நிரந்தரமாக பணியாற்றும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று அறிவிக்கப்பட்டது.


இந்த அறிவிப்பில், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.


இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. இதனால், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


1 கருத்து

  1. இந்த இ.நி.ஆ -->ப.ஆ பதவி உயர்வை ஒரு காலிப்பணியிடம் தான் நிர்ணயிக்க வேண்டுமா? கல்வித்தகுதி (BA BEd, Bsc BEd) முடித்துள்ள அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக அறிவிப்பு வெளியிடலாமே!!! அந்த படிப்புக்குரிய ஊக்க ஊதியம் அவர்கள் பெறுகிறார்கள். எனவே அந்தந்த பணியிடத்திலேயே அவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக அறிவித்தால் தமிழ்நாட்டில் துவக்கப்பள்ளியில் நல்ல Qualified Teachers பட்டதாரி ஆசிரியர் இருக்ககறாங்க' என்ற நன்மதிப்பு தொடக்கபள்ளிகளுக்கு கிடைக்கும். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பிரச்சனையும் முடிவுக்கு வரும்.இதை அரசுக்கு பரிந்துரைத்தால் என்ன!

    பதிலளிநீக்கு

 

Popular Posts

Recent