இந்த வலைப்பதிவில் தேடு

ஜூன் 13-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

புதன், 31 மே, 2023

 



ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தா்ஹாவில் சந்தனக்கூடுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவினை முன்னிட்டு வருகிற ஜூன் 13 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார்.


இங்கு ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற ஜூன் 19-ஆம் தேதி நிறைவடைகிறது.


ஜூன் 12- ஆம் தேதி இரவு 849-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கி, மறுநாள் 13-ஆம் தேதி அதிகாலையில் தா்ஹாவை அடைகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent