அரசு கல்லூரிகளில் 4000 பேராசிரியர்கள் பணி நியமனம் செய்ய இருக்கிறோம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதை பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது. தற்போது அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கிறார்கள். மாணவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுஉயர்ந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால், மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் உயர் கல்வியை பொருத்தவரை அரசு கலைக் கல்லூரிகளில் நிறைய மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த கல்வியாண்டில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் சேர்க்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் டிஆர்பி மூலமாக 4000 பேராசிரியர்களை பணி நியமனம் செய்யப் பட இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சற்று கால தாமதம் ஏற்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து விடும் என எதிர்பார்க்கப் படுகிறது. தீர்ப்பு வந்தவுடன் 4000 பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப் படுவார்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக