இந்த வலைப்பதிவில் தேடு

4 பாடத்தில் 35 - ‘ஜஸ்ட் பாஸ்’ மாணவரை கொண்டாடிய உறவினர்கள்: கேக் வெட்டி குதுகலம்

திங்கள், 22 மே, 2023

 



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்கு பாடங்களில் ஜஸ்ட் பாஸ் ஆகி 185 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர், உறவினர்களுடன் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே விளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைராஜ். இவரது மகன் நவீன்கரன், பரமக்குடி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். 


சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவில் இவர் 185 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் தலா 35 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 45 மதிப்பெண்களும் என மொத்தம் 185 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 


ஜஸ்ட் பாஸ் ஆன போதிலும் அவரை என்கரேஜ் பண்ணும் வகையில் பெற்றோர், உறவினர்கள் கேக் வெட்டி அமர்க்களமாக கொண்டாடிய நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் தற்போது செம வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதிப்பெண் குறைந்து விட்டதே என பிள்ளைகளைக் கடிந்து கொள்ளும் இந்தக் காலத்தில், உறவினர், நண்பர்கள் என ஒன்றுகூடி ஒவ்வொருவராக மாணவர் நவீன்கரனுக்கு கேக் ஊட்டி விட்டு, அவரை உற்சாகப்படுத்தினர். குறைவான மார்க் எடுத்ததால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், பெற்றோர்கள் மாணவர்கள் திட்டுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. 


இதனால், மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல், ஊக்கம் தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், ஜஸ்ட் பாஸான மாணவருக்கு உறவினர்களின் இந்த உற்சாகப் பாராட்டு, அடுத்தடுத்த தேர்வுகளில் இந்த மாணவருக்கு இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற உந்து சக்தியாக அமையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent