இந்த வலைப்பதிவில் தேடு

அரசு ஊழியர்கள் சம்பள பில் சர்வரில் பழுது - மே மாத சம்பளம் பெறுவதில் சிக்கல்

வியாழன், 25 மே, 2023

 


ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) திட்டத்தில் சம்பள விபரங்களை பதிவேற்றம் செய்யும் போது சர்வர் பழுதால் பில் வராமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மே மாத சம்பளம் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது.


தமிழக அரசு ஊழியர் களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பள விபரம் தயாரித்து ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., திட்ட சர்வரில் பதிவேற்றி, மறுநாள் பில் எடுப்பர். மாதந்தோறும் 15 ம் தேதி பில் எடுத்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான சம்பளம் தடையின்றி கிடைக்கும். 


மே மாதம் 22 ம் தேதிக்கு பிறகு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., திட்ட சர்வரில் சம்பள விபரத்தை பதிவிட்டுள்ளனர். மறுநாள் சம்பள பில் ஆன்லைனில் கிடைக்கவில்லை. சம்பள பில் வந்தால் மட்டுமே கருவூலகத்தில் ஒப்படைத்து அவரவர் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். மே 22 லிருந்து சர்வரில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பள கணக்கை ஏற்ற முடியாமல் தவிக்கின்றனர்.


சுழற்சி முறையில் சர்வர் ஏற்பாடு


இதுகுறித்து அரசுக்கு புகார் சென்றதை அடுத்து ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., சர்வரில் இடையூறு ஏற்படாமல் இருக்க திருநெல்வேலி, வேலுார் மண்டலத்தை சேர்ந்த சம்பள பட்டியலை காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரையும், சென்னை, திருச்சி மண்டலத்தை சேர்ந்தோர் மதியம் 12:45 முதல் மதியம் 3:15 மணி வரையும், மதுரை, கோயம்புத்துார் மண்டலத்தை சேர்ந்தோர் மதியம் 3:30 முதல் மாலை 6:00 மணி வரையும் சம்பள கணக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் இரவு முழுவதும் சர்வரில் இடையூறு வராது என தெரிவித்துள்ளனர்.


ஆனால், மண்டல வாரியாக குறிப்பிட்ட நேரத்தில் சம்பள கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய முடியாத வகையிலும் சர்வரில் தொடர்ந்து இடையூறு ஏற்படுவதால் ஆன்லைனில் சம்பள கணக்கை ஒப்படைத்து பில் எடுக்க முடியாத நிலை பெரும்பாலான அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மே சம்பளம் கைக்கு கிட்டுமா அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent