கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகள் முதலமைச்சர் இடம் அளிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்
ஜப்பானிலிருந்து முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் நேற்று மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளோம்
திருவண்ணாமலை வேலூர் கரூர் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது பள்ளி திறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை வைக்காவிட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது உண்மைதான்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது
பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும். என திருச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலியில் நடந்த ஆலோசனைக்கு பின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக