தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம்.. ரூ. 46,200க்கு விற்பனை..
ஒரு சவரன்: 3 நாளில் ரூ.1,280 எகிறியது!..
தங்கம் விலை ஒரு பவுன் ரூ. 46,200 ஆக உயர்ந்துள்ளது..
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை எப்போதும் சிறப்பாக இருக்கும்.
இந்நிலையில், கடந்த மாத அட்சய திருதியை நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் ஏப்.22, 23 ஆகிய நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். விற்பனையும் களை கட்டியது.
அதை தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கம் கண்டு வந்தது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வேகமாக அதிகரிப்பதும், மெதுவாக குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை ரூ.352 உயர்ந்து ஒரு பவுன் ரூ.46,000ஐ தொட்டது.இன்றும் தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஒரு பவுன் ரூ.200 அதிகரித்து ரூ.46,200 ஆகவும் ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ. 5,775க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் அதிகரித்து ரூ.83.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில், தங்கம் விலை இன்னும் உயர தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் ,சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக