இந்த வலைப்பதிவில் தேடு

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கோடை விடுமுறை - தமிழக அரசு

ஞாயிறு, 7 மே, 2023

 

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு பள்ளிகளை போன்று அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுமுகம் முடிவு எட்டப்பட்டதால் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


அந்த வகையில் கோடை விடுமுறை ஒவ்வொரு வாரமும் சுழற்சி முறையில் அங்கன்வடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் "மே மாதம் தொடங்கியது முதல் 50 சதவீத குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிக்கு வருகை தருகின்றனர்.


மேலும், கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக அங்கன்வாடிகளுக்கு வரும் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த15 நாட்களும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


எனவே 15 நாட்களுக்கு  குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். நாள்தோறும் 50 கிராம் வீதம் 750 கிராம் சத்துமாவை மொத்தமாக வழங்க வேண்டும்" என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent