இந்த வலைப்பதிவில் தேடு

இதயம் ஒரு கோவில் - மாரடைப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?

சனி, 6 மே, 2023

 




நமது உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. 


ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. நமது உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். 


நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சினை இருக்காது. 


இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சினை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வருகிறது. 


அறிகுறிகள் என்ன? 


சர்க்கரை என்பது இனிப்பான பொருட்களில் மட்டும் இருப்பது இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காய்கறிகள், திராட்சைப்பழம், கரும்பு என அனைத்து உணவுகளிலும் சர்க்கரை இருக்கிறது. காருக்கு எரிபொருள் எவ்வளவு அவசியமோ அதேபோல சர்க்கரையும் நமது உடலுக்கு அவசியம். சர்க்கரையின் அளவு அதிகரித்தாலோ, குறைந்தாலோ தான் பாதிப்பு ஏற்படுகிறது. 


சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்னவென்றால் பசி அதிகமாக இருக்கும். தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். பகலில் 15 முறை என்றால் இரவில் 5 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்கச் செல்வார்கள். மேலும் உடல் இளைத்துக் கொண்டே வரும். 


அப்போது அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று அர்த்தம். 2 விதமான சர்க்கரை நோய் உள்ளது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறைவாக இருந்து சர்க்கரை நோய் வருவது முதல் ரகம். இவர்களுக்கு இன்சுலின் ஊசி தான் போட வேண்டும். 2-வது பிரிவு என்பது 30 வயதுக்கு மேல் வரக்கூடிய சர்க்கரை நோய். அவர்களுக்கு மாத்திரைகள் கொடுத்து சரி செய்யலாம். 


சர்க்கரையை குறைப்பது தான் இன்சுலினின் வேலை. ஆனால் இங்கு சர்க்கரை குறையாமல் அதிகமாக உள்ளது. பிரிவு 1 என்பது இளைஞர்களுக்கு வரும் சர்க்கரை நோய். ஒரு வயது, 5 வயது குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரலாம். அவர்களுக்கு இன்சுலின் ஊசி போட வேண்டும். பிரிவு 2 என்பது வயதானவர்களுக்கு வரும் சர்க்கரை நோய். 


ஆபத்தான நோய் ரத்த அழுத்தம் போலவே சர்க்கரை நோயும் ஒரு ஆபத்தான நோய். ரத்த அழுத்தம் அதிகமானால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்படும். சர்க்கரை நோய் திடீரென மயக்கத்தை உண்டாக்கும். சுயநினைவு போய் விடும். பிறகு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் தான் மீள முடியும். சர்க்கரை நோய் தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது. 


ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது. கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர ஆண்மை குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. 


எனவே சர்க்கரை நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தால் அதற்கென உள்ள சிறப்பு சிகிச்சை நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அவர்கள் கூறும் மருந்து, மாத்திரைகளை எடுங்கள். சர்க்கரை கண்டிப்பாக கட்டுப்பாட்டுக்குள் வரும். 


பரிசோதனை முறைகள் இனி சர்க்கரை அளவை பரிசோதிக்கும் முறைகள் குறித்து பார்க்கலாம். காலையில் எழுந்த உடன் உணவு சாப்பிடாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்து பார்த்தால் 100-120 மில்லி கிராமுக்கு மேல் வராது. வெறும் வயிற்றில் ரத்தத்தின் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் போது 120-க்கு மேல் இருக்கக் கூடாது. 


அளவு 140, 160, 200 என உயர்ந்து இருந்தால் சர்க்கரை வியாதி வருவதற்கு அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம். அடுத்து சிறுநீரில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யலாம். சிறுநீரில் சர்க்கரை இருக்காது. ஆனால் சிறுநீரிலும் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். 


சர்க்கரை நோயை உறுதி செய்ய ஆஸ்பத்திரிக்கு சென்று முறையாக பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்வார்கள். உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து மற்றொரு முறை சோதனை செய்வார்கள். வெறும் வயிற்றில் காலை 7 மணிக்கு வந்து சர்க்கரை பரிசோதனை செய்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம், சர்க்கரை அளவு 100 உள்ளது. 


அதனை இயல்பான அளவு என்று சொல்ல முடியாது. இட்லி சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்துக்கு பின் சோதனை செய்யும் போது 140-க்குள் இருந்தால் இயல்பு நிலை.160, 180, 250- என்று சர்க்கரை அளவு இருந்தால் சர்க்கரை நோய் இருக்க வாய்ப்புள்ளது. உணவு சாப்பிட்ட பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிக்கும் போது 140-க்கு மேல் போனால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளப்படும். 


மேலும் சர்க்கரை நோயை கண்டுபிடிக்க ஜி.டி.டி. என்ற பரிசோதனையும் உள்ளது. அந்த சோதனையின் போது வெறும் வயிறாக இருக்கும்போது ரத்தம், சிறுநீர் எடுப்பார்கள். அதனை பரிசோதித்து பார்த்து விட்டு உங்கள் எடைக்கு தகுந்தாற்போல் 70 கிலோ என்றால் 70 கிராம் அளவுக்கு குளுக்கோஸ் கலந்து கொடுப்பார்கள். அதனை குடித்த பிறகு ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம், 2 மணி நேரம், 3 மணி நேரம் என தொடர்ந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதிப்பார்கள். 


சாப்பாட்டுக்கு முன்பு சர்க்கரை அளவு 100 இருந்து அடுத்தடுத்து எடுக்கப்படும் சோதனையில் 140, 200, 250, 300 என்று உயர்ந்து கொண்டே சென்றால் கண்டிப்பாக சர்க்கரை நோய் வந்து விட்டது என எடுத்துக் கொள்வார்கள். துரதிஷ்டம் என்னவெனில் வேறு ஏதோ பிரச்சினைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக ரத்த பரிசோதனை செய்யும் நிலையில் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. 


உதாரணமாக சர்க்கரை நோய் 2025-ம் ஆண்டு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். 2013-ம் ஆண்டிலேயே சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். உள்ளே நோய் இருப்பது தெரியாமல் ரத்தத்தில் மட்டும் சர்க்கரை இருக்கும். சர்க்கரை அளவு 200, 300 கூட இருக்கலாம். அந்த சமயமே கண்டுபிடித்து விட்டால் நோய் வராமல் தடுக்கலாம். அல்லது நோயை தள்ளிப் போடலாம். 


அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் 30 வயதுக்கு மேல் உங்கள் உடலில் சர்க்கரை நோய் உள்ளதா என்று ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்து கொள்வது தான் சிறந்த வழி. சர்க்கரை நோயாளிகள் சரிவர மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போகலாம். அளவு 20, 30-க்கு கூட குறைந்து விடும். 


அல்லது 200, 400-க்கு அதிகமாகி விடும். 100 இருக்க வேண்டிய சர்க்கரை அளவு 200-க்கு போனால் சுயநினைவு இல்லாமல் போய் விடும். கோமா நிலைக்கு சென்று விடுவார்கள். உடனே ஆஸ்பத்திரியில் அனுமதித்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டும். சர்க்கரை அளவு குறைந்து போனால் உடனடியாக இனிப்பு கொடுத்து மீட்கலாம். சர்க்கரை அளவு அதிகமாகி விட்டால் இன்சுலின் ஊசி போட வேண்டும். 


தடுக்க முடியுமா? 


தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் மகனுக்கு சர்க்கரை நோய் வரும். இது மரபணு மூலமாக வருகிறது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் அதாவது 14 கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 14 கோடி பேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. 10 கோடி மக்களுக்கு அந்த இரண்டும் இருக்கிறது. 5 கோடி பேருக்கு மாரடைப்பு வருகிறது. அதில் 50 லட்சம் பேர் மரணிக்கிறார்கள். அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். 


சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 3 முறைகள் உள்ளன. முதலில் உணவு உண்பதில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும், அதிக சர்க்கரை அளவு உணவுகளை சாப்பிடக்கூடாது. திராட்சை, மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது. அரிசி சாப்பாடு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் பாலீஷ் செய்த அரிசியை தவிர்க்க வேண்டும். கோதுமை, சிறுதானிய உணவுகளை சாப்பிடலாம். காய்கறிகள், பருப்பு வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 


இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. 2-வது உடற்பயிற்சி: சர்க்கரை அளவை குறைக்க தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி, டென்னிஸ், கால்பந்து, நீச்சல் என எதாவது ஒரு பயிற்சியை தொடர வேண்டும். 3-வது மருத்துவர்களை சந்தித்து மாத்திரைகள் உட்கொள்வது, இன்சுலின் ஊசி போடுவது. 


முதலில் சொன்ன உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டிலுமே சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து விடும். உடற்பயிற்சி மூலம் 100-க்கு 60 சதவீதம் கட்டுப்படுத்தலாம். இந்த இரண்டிலும் கட்டுப்படா விட்டால் தான் ஊசி, மாத்திரைகள் எடுக்க வேண்டும். இன்சுலின் ஊசியை நாமே போட்டுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒருமுறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். 


நவீன சிகிச்சையில் சிறு குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி போட மார்பின் இடது பக்கம் மேல் பகுதியில் இன்சுலின் பம்ப் ஒன்று பொருத்துகிறார்கள். இந்த பம்ப் சர்க்கரையின் அளவுக்கேற்ப தேவையான இன்சுலினை அவ்வப்போது செலுத்தி விடும். எனவே நவீன சிகிச்சைகள் பல வந்துள்ள இந்த சூழலில் எந்தவித அச்சமும் கொள்ளாமல் சர்க்கரை நோயை எதிர்கொள்வோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent