இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி தலைமை ஆசிரியைக்கும் சக ஆசிரியைகளுக்கும் மாணவர்கள் முன்னிலையில் நடந்த சண்டையால் பெறும் பரபரப்பு

வெள்ளி, 26 மே, 2023

 



பீகாரில் பள்ளி தலைமை ஆசிரியைக்கும் சக ஆசிரியைகளுக்கும் மாணவர்கள் முன்னிலையில் நடந்த சண்டையால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் காந்தி குமாரி. இவருக்கும் அனிதா குமாரி ஆசிரியைக்கும் வகுப்பறையின் ஜன்னலை மூடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியை காந்தி குமாரி ஆசிரியை அனிதாவை மாணவர்கள் மத்தியில் கண்டித்துள்ளார்.


இதனை அடுத்து தலைமை ஆசிரியை காந்தி குமாரி வகுப்பறையில் இருந்து புறப்பட்டநிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற ஆசிரியை அனிதா செருப்பை கழற்றி தலைமை ஆசிரியை காந்தி குமாரியை தாக்கியுள்ளார். இதனால் இருவரும் மாறி மாறி அடித்துக்கொண்டனர். இதை கண்ட மற்றொரு ஆசிரியையும் சேர்ந்து தலைமை ஆசிரியையை தாக்கியுள்ளார். 


மூன்று பேரும் பள்ளிக்கு அருகே இருந்த வயலில் உருண்டு பிரண்டு தாக்கிக்கொள்வதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறை ஜன்னல்களை மூடும் விவகாரத்தில் கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent