இந்த வலைப்பதிவில் தேடு

முதல்வர் ஆலோசனை…. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!

வியாழன், 29 ஜூன், 2023

 




இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 


மத்திய அரசே இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 


இந்நிலையில் ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், புதிய அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் இந்த திட்டத்தை அமல்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent