இந்த வலைப்பதிவில் தேடு

10ம் வகுப்பில் தன்னை அடித்த பள்ளி ஆசிரியரை 4 ஆண்டுகளுக்கு பின் சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்

வியாழன், 29 ஜூன், 2023

 




பெரம்பலூரில் கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர், 10ஆம் வகுப்பில் தன்னை அடித்த பள்ளி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து கைது செய்யப்பட்டார்.


திருச்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவர் பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வாஞ்சிநாதன் ஊருக்கு செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகேயுள்ள கிருஷ்ணா தியேட்டர் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தார்



அப்போது அங்கு வந்த ஜேம்ஸ் பாண்டி 10 ஆம் வகுப்பு படிக்கும்போது தன்னை ஏன் கண்டித்தாய்? அடித்தாய்


என்று ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமன்றி ஆசிரியரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.


இது குறித்து ஆசிரியர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்


ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜேம்ஸ் பாண்டி ஆசிரியரை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent