இந்த வலைப்பதிவில் தேடு

கோயிலில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இஸ்லாமிய இளம்பெண்: ஆசிரியை செயலுக்கு கிராமமக்கள் ஆதரவு

வெள்ளி, 23 ஜூன், 2023

 




தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் முருகன் கோவிலில் அமர்ந்து மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுத்து வருகிறார். பிஞ்சு உங்களுக்கு கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்ற இளம்பெண்ணின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டை போடாமல் ஆதரவு வழங்கி வருகின்றனர் கிராமமக்கள். 


மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளரிப்பட்டி கிராமம் இங்கு வசிக்கும் தஸ்லிமா நஸ்ரின் என்ற இளம்பெண் பி.ஏ வரலாறு பட்டப்படிப்பு முடித்துவிட்டு அங்குல மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.



இவரது வீட்டில் போதிய இடவசதி இல்லாத போதும் கிராம மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் அங்குள்ள முருகன் கோவிலில் கல்வி கற்று கொடுத்து வருகிறார். இவரது வகுப்பில் 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் சுமார் 20 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். கிராமத்து குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும் என்ற ஆசிரியை தஸ்லிமாவின் செயல்பாடு கிராமத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


அவர் இஸ்லாமியர் என்ற போதிலும் கோயிலில் மாலை நேர வகுப்புகளை நடத்த தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி கல்வியுடன் விடுகதை, பாடல், விளையாட்டும் இடம் பெறுவதால் சிறுவர்களும் ஆர்வமுடன் வகுப்புகளில் தவறாது கலந்து கொள்கின்றனர். ஏழ்மையில் வாழும் தஸ்லிமா 6தனது திறமையை அறிந்து தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையில் நிரந்தரமான வேலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 


தான் பெட்ரா கல்வியை இந்த குழந்தைகளுக்கு வழங்கி அவர்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கி கிராமத்திற்கு பெருமை சேருங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார் தஸ்லிமா நஸ்ரின்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent