ஜுலை மாதம் திரையிடப்பட வேண்டிய படத்தின் கதை சுருக்கம்
இயக்கம்: ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்
கதை: மெலிசா மேத்திசன்
வெளியான ஆண்டு 1982
மொழி: ஆங்கிலம்
துணையுரை மொழி : தமிழ்
திரைப்படத்தின் காலம்: 1 மணி நேரம் 54 நிமிடங்கள்
திரைக்கதை சுருக்கம்:
ஈ.டி. என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அறிவியல் புனைவு திரைப்படமாகும்.
புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்களே இதை தயாரித்தும் உள்ளார்.
இக்கதையை மெலிசா மேத்திசன் எழுதியுள்ளார்.
இக்கதையில்,ஒரு வேற்றுகிரகவாசி, தனது குழுவினரால் தவறுதலாக பூமியில் விட்டுச் செல்லப்படுகிறார்.
அச்சம் தரும் புதியசூழலில் தனித்து விடப்பட்ட அந்த வேற்றுகிரகவாசி, எலியட் என்ற 10 வயது சிறுவனால் அடையாளம் காணப்பட்டு. ஈ.டி என பெயர் சூட்டப்படுகிறது.
இவர்கள் இருவரும் எதிர்கொள்ளும் சவாலான சூழல்கள் அவர்களுக்கு இடையே ஒரு ஆழமான நட்பை ஏற்படுத்துகிறது.
எலியட்டாலும் அவனது உடன்பிறந்தோராலும் பூமியில் உள்ள வாழ்க்கையைப் பற்றி ஈ.டி. அறிந்து கொள்கிறது. ஈ.டி. தனது வீட்டிற்கு திரும்ப விரும்புகிறது.
எலியட் ஈடிக்கு உதவி செய்தால், அவனது ஒரு நல்ல நண்பனை பிரிய நேரிடும்.
எலியட் ஈடியை வழியனுப்ப சவால்களை எதிர்கொள்கிறானா; அவன் சவால்களை எதிர்கொண்டு தனது நண்பன் ஈடியை அதன் கிரகத்திற்குத் திரும்ப அனுப்பினானா என்பதே மீதமுள்ள கதை. இத்திரைப்படம் கீழ்காணும் விருதுகள் பெற்றுள்ளது.
அ. ஆஸ்கார் விருதுகள்
1.சிறந்த பின்னணி இசை: ஜான் வில்லியம்ஸ்
2. சிறந்த ஒலி தொகுப்பு: சார்லஸ் எல். கேம்ப்பெல் மற்றும் பென் பரீட்
3. சிறந்த ஒலி அமைப்பு: ராபர்ட் நுட்சன், ராபர்ட் கிளாஸ், டான் டிஜிரோலமோ மற்றும் ஜீன் காண்டமேசா
4. சிறந்த காட்சி அமைப்பு(Visual Effects): கார்லோ ராம்பால்டி, டென்னிஸ் முரென் மற்றும் கென்னத் எஃப். ஸ்மித்
ஆ. 40வது கோல்டன் குளோப் விருதுகள்
1. நாடகக் கதை பிரிவில் சிறந்த படம்
2. சிறந்த இசை: ஜான் வில்லியம்ஸ்
இ 26வது ஆண்டு கிராமி விருதுகள் - குழந்தைகளுக்கான சிறந்த பதிவு: படத்தின் ஒலிப்புத்தகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக