தற்போது தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் பள்ளி சுய விபரங்கள் தொடர்பான தகவல்களை பராமரிக்க https://emis.tnschools.gov.in என்ற தனி இணையதளம் பயன்படுத்தப்படுகிறது.
மாநிலக்கல்வித்துறை பராமரிப்பில் உள்ள இந்த இணையதளத்தில் உள் நுழைய ஒவ்வொரு பள்ளிக்கும் எட்டு இலக்க எண் கொண்ட தனி குறியீடு எண் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான கடவுச் சொல்லைப் பயன்படுத்தி இணையதளத்தை பயன்படுத்தலாம். மேலும் பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டுமின்றி கல்வித்துறை அதிகாரிகள் உயரதிகாரிகள் என்று தொடர்புடைய அனைவருமே இந்த இணையதளத்தில் தரவைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். கண்காணிப்பும் செய்ய முடியும்.
தற்போது கூடுதல் வசதியாக மாணவர்களுக்கு 3 சான்றிதழ்கள் பெறும் வசதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் மாணவர்கள் தங்கள் வருமானம் ஜாதி இருப்பிட சான்றிதழ்களை இந்த இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கான இணைப்பு அந்த இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவர்கள் பிரிவில் படிவம் பகுதியில் ஒரே விண்ணப்பத்தில் ஜாதி வருமானம் இருப்பிடம் ஆகிய 3 சான்றிதழ்களை பெற முடியும்.
அதற்காக விண்ணப்பத்தில் மாணவரின் விபரங்கள் ஆதார் எண் முகவரி தொடர்பு விபரங்களுடன் போட்டோ ஸ்மார்ட் கார்டு பெற்றோர் ஜாதி சான்று உள்ளிட்ட பொருத்தமான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் மாணவர்கள் வெளியே சான்றிதழ்களுக்காக அலையும் நேரம் மிச்சமாகும். விரைவாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக