இந்த வலைப்பதிவில் தேடு

மரம் வளர்க்கும் மாணவருக்கு 5 மார்க் - ஹரியானா அரசு புது திட்டம்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

 



ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது மரகன்று நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வகுப்பில், 1 - 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும், ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:


சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், மாணவர்களிடையே சமூகப் பொறுப்பை வளர்க்கவும், மாநில அரசு சார்பில் மரம் வளர்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டப்படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மரக்கன்றுகள வழங்கப்படும். அதை சிறப்பாக பராமரிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வகுப்பில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். மரத்தின் வளர்ச்சிக்கேற்ப, 1 முதல் 5 மதிப்பெண்கள் வரை மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.இந்த திட்டம் குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 


இதற்காக, அனைத்துப் பள்ளிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்க வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வனத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுத்துவர். இதற்காக, பள்ளிகளில் தொடர்பு அலுவலர் நியமிக்கப்படுவார். இந்த அண்டு மாநிலம் முழுதும், 1.93 லட்சம் பேர் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent